- Back to Home »
- kavithaikal »
- பெண்மைக்கு வணக்கம்
Posted by : Unknown
Wednesday, 8 May 2013
பெண்மைக்கு வணக்கம்
வித்தகன்
பெண்ணே உன்னால் பிறவி கொண்டேனே,வளர்பிறையாய் நான் வளர,
தேய்பிறையாய் நீ மறைந்தாயோ?
இடைவெளியாய் இருளை நான் உணர,
தாரமாய் மீண்டும் வந்தவள் நீதானோ?
தாரம் தந்த இன்பத்தில்,
தலைமைகளை கொண்டேனோ?
என் தாயை மீண்டும் கண்டேனோ?
தரை தவழ்ந்த முதல்,
தலை நரைத்த வரை,
ஈன்ற தாயாய்,
ஈசனில் பாதியை,
ஈன்றெடுத்த மகளாய்,
பேரு கொண்ட பெண்மைக்கு,
என் தமிழை கொண்டு தலை வணங்குகிறேன்