Posted by : Unknown Wednesday, 8 May 2013

கவி ஓவியம்

ஆ. தைனிஸ்
உள்ளமதில் வெள்ளமென
எழுந்திட்ட எண்ணங்களை
கருத்தாய்ந்து பகுத்தாய்ந்து
பாரெல்லாம் வழங்கிடவே
அன்னைத்தமிழ் அருள்வேண்டி
தமிழ்புலவன் நடைநின்று
தெளிமிகு சிறப்புடனே
வடித்திடவே முனைந்திட்டேன்
சொல்லொன்று தீட்டிடவே
ஓராயிரம் நொடிப்பொழுது
செலவழித்து இரவெல்லாம்
விழிகளை சேகரித்து
நாளெல்லாம் மூச்சுவொன்றே
உணவாக சுவாசித்து
தீட்டிட்ட தீந்தமிழ் திரவியம்
நான் வரைந்திட்ட கவி ஓவியம்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © mother'skavithakal in tamil - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -