அந்தி மாலை என் தோழர்கள் வரும் வேலை .....!!!!
அந்தி மாலையிலே .....
நதியின் அலையிலே
நழுவிப் போகும் கதிரவன்
நெஞ்சில்
கொஞ்சம் கனம்தானோ....!!!!
இறை தேடிய
கொக்குக் கூட்டம்
அறை தேடித் போகும் பொது
அரை மனதோடு அளந்து பறக்கிறதே..........!!!!!
சல சலத்த
ஆலங்கிளை சலனம்மற்று
சிலையானதே .....!!!!
பகல் குருடன்
பழம்தின்னி வௌவோல்
ஜாமதிருட்டுக்கு தடம் பார்க்கிறதோ .....!!!!
ஓடை நீரெல்லாம்
ஆடை நெய்வதைப் போல்
சப்தம் போட்டுக்கொண்டே
சங்கீதம் கற்க்கிறதோ,,,,,,,!!!!
இவர்களே
நான் அந்தியில் சந்தித்த
அன்புத் தோழர்கள் ........,""""!!!